Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 06 NOV 1982
இறப்பு 12 OCT 2021
அமரர் நெடுஞ்செழியன் கோபாலப்பிள்ளை (கண்ணா)
வயது 38
அமரர் நெடுஞ்செழியன் கோபாலப்பிள்ளை 1982 - 2021 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெளுக்குளத்தை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நெடுஞ்செழியன் கோபாலப்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 10-11-2021 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணம் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்று, 12-11-2021 வெள்ளிக்கிழமை அன்று வீட்டுகிருத்திகை அன்னாரின் வவுனியா இல்லத்திலும் நடைபெறும். அத்தோடு வவுனியா இல்லத்தில் மதியபோசன விருந்து நடைபெறும். அதை தொடர்ந்து Canada வில் 13-11-2021 சனிக்கிழமை அன்று நடக்க இருக்கும் மதியபோசன விருந்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

மண்டபம்: Sankamam Banquet Hall 42 Tuxedo Court, Scarborough ON, M1G 3S3

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், நண்பர்கள், குடும்பத்தினர்
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.