1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
4
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கிளிநொச்சி பளையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நவரட்ணராஜா நவரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உங்கள் தோற்றல் மறைந்தாலும்!
உங்கள் தூயமுகம் தொலைந்தாலும்!!
தூரம் தொலைவில் நீங்கள் துயில் கொண்டாலும்!!!
உங்கள் தொடர்பை எம்மால்
துண்டிக்க முடியாமல் துவளுகின்றோம் தூயவனே
விதி செய்த சதியால் நீங்கள் வேறு உலகம் விரைந்தாலும்
உங்கள் விழுதுகள் உம் நினைவால்
விம்மித்தான் அழுகின்றார் இங்கே!!!
நீ எங்களை விட்டு தூரத்திலில்லை
நினைவுகளில் இருக்கிறாய்...!
எங்கும் போகவில்லை நீ
எங்கள் இதயங்களில் வாழ்கிறாய்..!
ஜென்மங்கள் எத்தனை ஆனாலும்
வருகின்ற ஜென்மம் எல்லாம்
இந்த ஜென்ம உறவாயே வர வேண்டும் நீங்கள்!
உங்கள் ஆத்மா அமைதிபெற பிரார்த்திக்கின்றோம்
தகவல்:
ரஞ்சி குடும்பம், மகா குடும்பம், நவா குடும்பம், இந்திராணி குடும்பம்