1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 05 OCT 1940
மறைவு 26 JUL 2021
அமரர் நவரத்தினம் தவமணி 1940 - 2021 மயிலிட்டி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 27 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் 306 நாவலர் வீதி, நல்லூர் 31/1 சங்கிலியன் வீதி திருவேரகம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நவரத்தினம் தவமணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

காத்திருக்க நேரமில்லை - காலங்களுக்கு
கண்ணீரோடு கடந்தது ஒரு வருடம்
எண்ணிய போது ஈரமானது கண்கள்!
கனமானது இதயம்!

ஆயிரம் ஆயிரம் கஷ்டங்கள்
அத்தனையும் எங்களுக்காக
நாங்கள் எண்ணியது பல உண்டு
உங்களுக்காக ஏமாற்றமே எமதானது

மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை
தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்...

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 30 Jul, 2021
நன்றி நவிலல் Wed, 25 Aug, 2021