யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Homburg ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் மகேஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அம்மா நீங்கள் இருக்கும் வரையும்
வாழ்ந்தோம் எல்லோரும் அழகாக
அம்மா நீங்கள் விடைபெற்ற பின் அழுகை மட்டுமே வரவாக
அம்மா சும்மா இருந்தாலே- சொர்க்கம் தெரியும்
வரமாக
அம்மா அம்மா என்று அழைக்கின்றோம் எல்லாம்
இங்கே வலியாக......!
அதிகாலை அன்னையே உன் முகம் தானே எங்கள்
கண் பார்க்கும் திருமுகம்
அன்றாட உணவுகளில் எல்லாம் அதிசுவையோடு
பரிமாறி முகம் பார்ப்பாயே - இதைவிட உண்டோ
பரவசம்
மன்றாடி மன்றாடி மனம் முழுதும் வெறுமையின் கலவரம்
மனதுக்குள் கேட்குதே நீ அழைக்கும் ஓசையின்
சுப வரம்
வீட்டன் ஒவ்வொரு அறைகளிலும் உந்தன் ஞாபகம்
எங்கே போனது எங்கள் தாய்முகம்
என்றும் எங்களுக்கு நீங்கள் தானே தாயகம்
நீங்கள் இல்லாத உலகம் இன்று செல்லாத நாணயம்
அழகழகாக ஆளாக்கி உலகாக்கிய அன்னையே
ஆனந்தமாக படுத்துறங்க மடிதரும் திண்ணையே
அகிலமே போற்ற வாழ வைத்தாய் - எம்மையே
அனைவரும் சேர்ந்து தொழுகின்றோம் உம்மையே
ஓம் சாந்தி...
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
RIP dear sister, our deepest condolences