1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நவரத்தினம் புண்ணியமூர்த்தி
ஓய்வுபெற்ற தபால் ஊழியர்
வயது 77
Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
முகமாலையைப் பிறப்பிடமாகவும், எழுதுமட்டுவாளை வசிப்பிடமாகவும், நெல்லியடி கிழக்கு வைரவர் கோயில் ஒழுங்கையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த நவரத்தினம் புண்ணியமூர்த்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்!
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே!
உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம் நிரந்தரமாய் விரைந்தீரோ?
ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
இந்நாளில் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்