முகமாலையைப் பிறப்பிடமாகவும், எழுதுமட்டுவாளை வசிப்பிடமாகவும், நெல்லியடி கிழக்கு வைரவர் கோயில் ஒழுங்கையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் புண்ணியமூர்த்தி அவர்கள் 15-11-2018 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பொன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
கவிதா(லண்டன்), உமா(பிரான்ஸ்), பாமா(இலங்கை), கேசவன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற செல்லம்மா, செல்லத்துரை, கனகசபை, பாலகிருஷ்ணன், பாலலட்சுமி, பாலச்சந்திரன், சிவபாலன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனகசபை(கனடா), தங்கம்மா, செல்லம்மா(லண்டன்), சுப்பிரமணியம்(லண்டன்), சிவராசா(சேரன்), கனகம்மா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சத்தீஸ்வரன்(லண்டன்), பார்த்தீபன்(பிரான்ஸ்), தமிழ் அழகன்(இலங்கை), தர்மினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டிலக்சன், லினோசன், ஜெய்சன், கருஷ்ணி, சபீக்கா, சிறீநிகேத், நிகேசினி, ஆர்யன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வதிரி ஆலங்கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்