1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தவநாயகம் சறோஜினிதேவி
வயது 83
Tribute
9
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். தீபகற்பம், நாரந்தனை, ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தவநாயகம் சறோஜினிதேவி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா… அம்மா…அம்மா
காலம் தந்த கடவுள் நீ
கை கூப்பி வணங்கும் தெய்வம் நீ.
உயிருக்குள் அடை காத்து
உதிரத்தை உணவாக்கி
பாசத்தில் தாலாட்டி
பல இரவுகள் தூங்காது
நமக்காக கண் விழித்து வாழ்ந்த
தெய்வமே எங்கள் அம்மா.
இன்பம் துன்பம் எதுவாகினும்
பக்கத்தில் இருந்து தட்டிக்கொடுக்கும்
தன்னலமற்ற உன்னத உறவு அம்மா.
உலகில் தேடித்தேடி அலைந்தாலும்
மீண்டும் அமரமுடியாத சிம்மாசனம்
அம்மா உன் கருவறை தான்.
அம்மா என்கிற அன்புதான்.
ஆறுதல் சொல்ல
ஆயிரம் உறவுகள் இருந்தென்ன
எங்கள் அம்மா இல்லை என்றால்
நாம் அனாதைகள் தான்.
அம்மா நீங்கள் மறைந்தாலும்
உங்கள் நினைவுகளுடன்தானே வாழ்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்