யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், ஆவரங்காலை வசிப்பிடமாகவும் கொண்ட நவமணி வேலுப்பிள்ளை அவர்களின் நன்றி நவிலல்.
எங்களை எல்லாம் மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு இறைபதம் எய்திய எங்கள் அன்புத் தாய் நவமணி வேலுப்பிள்ளை அவர்கள் இறைபதமடைந்த செய்தி அறிந்து அவர் இல்லத்திற்கு வருகை தந்து ஆறுதல் கூறிய உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள் அனைவருக்கும் வெளிநாட்டில் அவரது பிள்ளைகளின் வீட்டிற்கு வருகை தந்தும் தொலைபேசிமூலமும், ஆறுதல் கூறிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், பத்திரிகை, சமூக ஊடகங்கள் மூலமாக கண்ணீர் அஞ்சலி செலுத்தியவர்களுக்கும் மற்றும் ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயம் பழைய மாணவர், சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை பழைய மாணவர், ஆவரங்கால் மக்கள் ஒன்றியம்(கனடா), ஆவரங்கால் ஒன்றியம்(ஐக்கிய இராச்சியம்), சுகாதார பரிசோதகர்கள்(யாழ் மாவட்டம்) மற்றும் அந்தியேட்டி சபிண்டீகரணம் முதலிய ஆத்ம சாந்தி கிரியைகளிலும் பங்கு பற்றிய உற்றார், உறவினர், அன்பர்கள், நண்பர்கள் யாவருக்கும் எமது இதய பூர்வ நன்றிகளையும் அன்பு கனிந்த வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி!