
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், ஆவரங்காலை வசிப்பிடமாகவும் கொண்ட நவமணி வேலுப்பிள்ளை அவர்கள் 28-05-2020 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைரவநாதன் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வைரவநாதன் வேலுப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
பாலேந்திரா(கனடா), நாகேந்திரா, இராஜேந்திரா(மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்- நல்லூர்), குபேந்திரா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தம்பித்துரை, தர்மலிங்கம் மற்றும் சிவபாக்கியம், வேதநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகாலக்ஷ்மி(கனடா), சிவாஜினி, சறோஜினி(கனடா) ஆகியோரின் அருமை மாமியாரும்,
தேவகி(கனடா), மகரன்(கனடா), கிஷோர், கானப்பிரியா, பானுஷா(கனடா), பவித்திரா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-05-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆவரங்கால் கரதடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.