கிளிநொச்சி பூநகரி நல்லூரைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு துணுக்காயை வசிப்பிடமாகவும் கொண்ட நவமணி காசிநாதன் அவர்களின் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நாட்கள் 31 கடந்துவிட்டன அம்மா...
ஆனால் நீங்கள் இல்லாத வெற்றிடம் மட்டும்
இன்றும் நிரம்பாமல் இருக்கிறது.
ஒவ்வொரு காலையும் "அம்மா" என்று
அழைக்கத் தோன்றுகிறது; ஆனால் பதிலுக்கு
கிடைப்பது உங்களது நினைவுகளின் அமைதிதான்.
உங்கள் மடியில் சாய்ந்த நிம்மதியும்,
உங்கள் கரம் தொட்ட ஆறுதலும்,
உங்கள் அன்பு நிறைந்த பார்வையும்— இவை
அனைத்தும் இன்று கண்ணீராகவே
எங்கள் கண்களில் வாழ்கின்றன.
காலம் ஆறுதல் தரும் என்பார்கள்;
ஆனால் உங்களை இழந்த வலி மட்டும்
நாளுக்கு நாள் எங்கள் இதயத்தில்
ஆழமாகவே பதிந்திருக்கிறது.
நீங்கள் எங்களோடு இல்லையென்றாலும்,
நீங்கள் கற்றுத்தந்த அன்பும்,
நீங்கள் விதைத்த நற்குணங்களும்,
நீங்கள் தந்த ஆசிகளும் என்றும்
எங்கள் வாழ்வை வழிநடத்துகின்றன.
அம்மா...
நீங்கள் எங்களுக்கு ஒரு உறவு மட்டுமல்ல;
எங்கள் உலகமே நீங்கள் தான்.
அந்த உலகத்தை இழந்த துயரம்
இன்றும் மாறவில்லை...
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் ஆவணி மாதம் 4ம் நாள் 21-08-2026 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் கீரிமலை கோவில் தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்தியம் ஆவணி மாதம் 6ம் நாள் 23-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப அவரது இல்லத்தில் நடைபெறும் அதனைத் தொடர்ந்து ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் மகேஸ்வர பூஜை( மதியபோசனம்) நடைபெறும். இந்நிகழ்விலும் கலந்து அன்னாரின் ஆத்ம சாந்தி பெற பிரார்த்திக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
To her family, please know that our thoughts and prayers are with you during this difficult time. May you find comfort in the cherished memories you shared and strength in the legacy of love she...