5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நத்தானியல் பிறாங்
வயது 20
அமரர் நத்தானியல் பிறாங்
2000 -
2020
Harrow, United Kingdom
United Kingdom
Tribute
64
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
பிரித்தானியா Harrow வைப் பிறப்பிடமாகவும், Prestwood Buckinghamshire ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நத்தானியல் பிறாங் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
இதயம் இத்துயர் சுமந்து ஐந்தாண்டு
ஆனாலும் நித்தம் உனை
நினைத்தே நிம்மதி இழக்கின்றேன்
ஐந்தாண்டு என்ன நூறாண்டே ஆனாலும்
கண்விட்டு அகலுமோ என் கண்ணனின் விம்பம்!
தூக்கமில்லா இரவுகளை எங்களுக்குத்
தந்துவிட்டு நொடிப்பொழுதில் எம்மை
மறந்து துயில் கொள்ளப் போனதெங்கே
மொட்டாகி பூவாகி காயாகி கனியாகும்
வேளையில் காத்திருந்து படைத்தவன்
பழி தீர்த்தானோ ?
எங்களை தவிக்க விட்டு
நீர் தூரமாய் சென்றதென்ன?
எங்கள் முகம் காண
வருவாயா ஓர் கணமே?
பிறந்து விட்டோம் இம்மண்ணில்
இறுதிவரை வாழ்வோம் நீ
விட்டுச் சென்ற நீங்காத நினைவுகளோடு... !
உன் பிரிவை நினைத்து எங்கள்
கண்ணீரால் கவலையை ஆற்றுகின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
May his soul Rest in peace.