****கண்ணீர் அஞ்சலி*** எம்மோடு வாழ்ந்து வந்த அதிமூத்த பண்பாலயமாம் திருப்பதி என்னும் பொன்னாலயம் இன்று சோதி இழந்து போய்விட்டது. எப்போதும் புன்சிரிப்பும் பகிடியும் பாசமும் மட்டுமே வெளிக்காட்டத் தெரிந்த மிகநல்ல உள்ளம் கொண்ட பெருவிருட்சம் இன்று சாய்ந்து விட்டது. பருவாவயத்தில் திரு, நடரசாவை திருமணம் செய்து முத்தான மூன்று சோதிகளை பெண்களாய் பெற்றெடுத்து முறையே சோதிமதி சோதிமலர் சோதிமணி எனப்பெயர்சூட்டி இவர்களுக்கெல்லாம் உறுதுணை ராஜாவாக ஒரு ஆண்மாக்கவை பெற்று சோதிராசாவாக்கி வாழ்ந்து வந்த ஒரு பெண்ணாலையம் இந்த திருப்பதி பாட்டி. திருப்பதி அக்கா என்று எல்லாவயத்தினராலும் செல்லமாக அழைக்கப்பட்ட. திருமதி திருப்பதி நடராசா இயற்கை எய்திய துயரம் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாத பெருங்கவலையே. பிறக்கின்றபோதே இறக்கின்ற தேதி இருக்கின்றதென்பது மெய்யே, என்பதையும், ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டோர் மீண்டு வருவதில்லை என்னும் முதுமொழியையும் மனதில் ஏற்று அன்னாருக்கு எமது கண்ணீரை காணிக்கையாக்குகிறோம். அருள் பிரகாசம் குடும்பம்.