யாழ். பளை கச்சார்வெளியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த நாராயணபிள்ளை பூபாலசிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 15-03-2024
ஐந்து ஆண்டுகள் மறைந்தாலும்
ஆறவில்லை எங்கள் துயரம்
ஆறாத்துயரில் எங்களை ஆழ்த்தி விட்டு
மீளாத் துயில் கொண்டீர்களே !!
எண்ணிலடங்கா மாணவர்களுக்கு
படிப்பதற்கு உதவி செய்த உள்ளீர்கள்
நீங்கள் உயிருடன் இருக்கும் போது
எங்களுக்கு தெரியவில்லை அப்பா...
உங்களின் பிரிவு நாள் அன்று
அனைவரும் உங்களை பற்றி புகழ்ந்து
சொன்ன போது உங்களை பற்றி
இன்னும் கூடுதலாக அறிந்து கொண்டோம்...
சமூக சேவைகள் பல செய்தீர்கள்
கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு
உதவிகள் பல செய்துள்ளீர்கள்...
இன்ப உணர்வுகளையும்
உம்மால் கண்டு கழித்த
நாட்கள் கடந்து உமை
நினைத்து கண்ணீர் மல்கும்
நாட்கள் வந்ததே...
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில் உங்களை
கண்டிட முடியாதோ....
ஆண்டுகள் ஐந்தென்ன ஐந்து யுகம் கடந்தாலும்
அழியாத உங்கள் நினைவுகள் எம்மிலே வாழும்
காலத்தின் சக்கரங்கள் கடுகதியில் கடந்தாலும்
உங்கள் காலடித்தடங்களில் நாம் தொடருவோம்…..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஆத்மா சாந்தி அடைய இறைவனை வோண்டுகறோம் அவரின் குடும்பத்தின் துயரிலும் பங்கு கொள்கின்றோம்