Clicky

பிறப்பு 18 JAN 1949
இறப்பு 27 JUN 2022
அமரர் நந்தீஸ்வரர் வேலுப்பிள்ளை
Professional Engineer, Building Inspector City of Markham, உரிமையாளர் Nanthee & Son’s Building Inspection , கனடா இந்துமாமன்றச் செயலாளர், கனடா மகாஜனா OSA போசகர்
வயது 73
அமரர் நந்தீஸ்வரர் வேலுப்பிள்ளை 1949 - 2022 பன்னாலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Sriranjani 29 JUN 2022 Canada

நந்தி அண்ணாவின் மறைவு அவரின் குடும்பத்துக்கு மட்டுமல்ல, சமூகத்துக்கே ஒரு பெரும் இழப்பெனலாம்! அவரின் அக்காவிடம் நான் தூயகணிதம் படித்திருக்கிறேன், அவரின் தங்கைச்சியை எனக்குத் தெரியும். ஆனால் இங்குவந்த பின்புதான் நந்தி அண்ணாவின் அறிமுகம் எனக்குக் கிடைத்திருந்தது. அவரின் சகோதரிகளில் பார்த்திராத பல சிறப்புக்களை நான் அவரில் பார்த்தேன், வியந்தேன். தொழில்ரீதியில் ஒரு பொறியியலாளரான அவர் இங்கும் அதே துறையில் வேலையைத் தேடிக்கொண்டதுடனும், தன் பிள்ளைகள் உயர்நிலைக்கு வர உதவியதுடனும் நின்றுவிடவில்லை. ஏனையோரின் வெற்றிகளையும் கொண்டாடினார். மகள் gifted ஆகத் தெரிவு செய்யப்பட்டிருந்தபோது அதுபற்றி மகாஜனன் மலரில் பிரசுரித்து ஊக்குவிக்க வேண்டுமென விருப்பப்பட்டார். அப்படியாகப் பலபேரின் திறமைகளைக் கொண்டாடியிருக்கிறார். சங்கங்கள் ஊடாக மட்டுமன்றி தனிப்பட்டரீதியிலும் சமூகம் முன்னேறவேண்டுமென முன்நின்று முழுமூச்சுடன் உழைத்திருக்கிறார். தன் வீட்டில் இலவசமாக பாடம் சொல்லிக்கொடுத்தார். அதேபோல இளம்பிள்ளைகளின் ஆக்கத்திறனை மேம்படுத்த மகாஜனா பழைய மாணவர் சங்கத்துக்கூடாக இளையோருக்கான சஞ்சிகையையும் கல்வித்திறனை முன்னேற்ற கணித மற்றும் பொது அறிவுப் போட்டிகளையும் அறிமுகப்படுத்தினார். இந்த இரண்டிலும் அவருடன் சேர்ந்து வேலைசெய்தமையால் அவரின் அர்ப்பணிப்பைக் கண்கூடாகப் பார்க்க முடிந்திருந்தது. மகாஜனாப் பழைய மாணவர் சங்கத்தின் தலைவராக அவர் இருந்தபோது உண்மையான தலைமைத்துவம் என்றால் என்னவென்று நான் பார்த்தேன். ஒருவரின் திறன் அறிந்து அவருக்கு ஒரு பொறுப்பைக் கொடுத்துவிட்டால் பின்னர் அவர் அதில் தலையிடமாட்டார். அதனால்தான் சில காலம் அதிகம் செய்ற்படாமல் இருந்த சங்கத்தின் நிகழ்வுகள் யாவும் முத்திரை பதிக்கும் நிகழ்வுகளாக இருந்தன. அந்த நேரத்தில் வெளிவந்த சஞ்சிகைக்கு நான் பொறுப்பாக இருந்தமையால் அதன் சிறப்புக்கு எவை காரணமென்பது எனக்குத் தெள்ளத்தெளிவாகத் தெரியும். ஏனைய நிகழ்வுகளுக்குப் பொறுப்பாக இருந்தவர்களும் இதை நிச்சயம் ஒத்துக்கொள்வார்கள். இப்படியான நல்லியல்புகளுடன் இருந்தமையால்தான் அலைக்கழியாமல் விடைபெறும் வரம் கிடைத்ததோ, என்னவோ!

Summary

Notices