

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட நந்தகுமார் குமாரசுவாமி 6ம் மாதம் நினைவஞ்சலி மற்றும் அந்தியேட்டி.
நாட்கள் பல சென்றாலும்
கனவெல்லாம் கண்ணீர் சொரிய
கண்கள் நீரில் மூழ்க
கண்டது எல்லாம் உம் நினைவாக
துடிக்கும் உம் உறவுகளின் புலம்பல் இது!
எமக்கு எல்லாம் ஆதரவு தந்த
எம் தந்தையே!
ஆறு மாதம் சென்றாலும்
எம் நினைவே உருவாகி உள்ளீர்!
இனி எப்போது எமக்களிப்பீர் உம் தரிசனம்!
எமை எல்லாம் தாங்கிப் பிடித்த
வழிகாட்டியே நீர்
இப்பிறவி அல்ல எப்பிறவியிலும்
எமக்கு தந்தையாக வேண்டும்!
என இறைவனை மன்றாடுகின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
என்றும் உங்கள் நினைவில்
அன்பு மனைவி, பிள்ளைகள்,
அம்மா, அக்கா, தங்கைகள், மைத்துனர்கள்,
சித்தப்பாமார்கள், சித்திமார்கள், சகோதரர்கள், மாமா, மாமி, மருமக்கள்
Our heartfelt condolences ?