யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், கச்சேரி, நல்லூர், திருகோணமலை வித்தியாலய வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நமசிவாயம் திருச்செல்வம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
தந்தையே !!!
இப்பூவுலகில் நீங்கள் உதித்ததால்,
நாங்கள் மிளிர்கின்றோம்.
நமசிவாயத்திர்க்கும் செல்லம்மாவுக்கும்,
முதல்வர் நீங்கள்,
திரெளபதி, தில்லைநடராஜா என,
இளையவர்களை உடன் கூடக் கொண்டு,
பாசத்தையும் மவுனத்திலேயே பகிர்ந்தீர்கள்.
சமாதனம் சமத்துவம் எங்கும் நிலவிட,
எல்லோரையும் அன்பால் அரவணைத்தீர்கள்.
ஆசானாகவும் இருந்த நீங்கள்,
திருக்கேதீஸ்வரத்தில்க் கரம்பிடித்த,
செல்லம்மாவையும் கற்ப்பிக்க வைத்தீர்கள்.
கடல் கடந்தாலும் கற்ப்பித்தலை,
கைவிடவில்லை எம், ஆசானே நாம் !
சிவச்செல்வன், கேதீஸ்வரன், கெளரி,
இரவிக்குமார், நவநீதன், மாகாமூர்த்தி என,
ஆறு விழுதுகள் கொண்டு,
அன்பே உறுதியானது என அசையாமல் நின்றவரே !
உங்கள் மலர்ந்த முகத்தைத் தவிர,
துளிக் கண்ணீர் கூட கண்டதில்லை நாம்.
சகலதுறை வீரனே ஆசானே !
பெண்களுக்கு சமவுரிமை வழங்கிட வேண்டும்,
அவர்களுக்கு சமமாக உதவிட வேண்டும்.
விட்டுக்கொடுப்பு பொறுமை,
என்ன என்பதை வீட்டிலேயே செய்து காட்டி,
எமக்குள் விதைத்தவரே !
உங்களால் தான் நாம்,
இன்றும் நிலைத்திருக்கின்றோம் !
இப்பூவுலகை விட்டு, சொர்க்க லோகம் செல்லுமுன்,
ஆதி என்னும் பேரனும் அவதரித்தான்.
அந்தம், பல யுகங்கள் சென்றாலும்,
இல்லலை இனி உங்களுக்கு.
வாழ்வீர்கள் எம்மூடான மனங்களில் என்றென்றும்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
You’re not alone in your sadness, as warm thoughts and deepest sympathy are with you