1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நமசிவாயம் திருச்செல்வம்
ஓய்வுபெற்ற தொழில்நுட்ப அலுவலகர் நீர்ப்பாசனத்திணைக்களம் , முன்னாள் ஆங்கில ஆசிரியர், Old Boy of St. John's College, Jaffna
வயது 87
Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், கச்சேரி, நல்லூர், திருகோணமலை வித்தியாலய வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நமசிவாயம் திருச்செல்வம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஆனாலும் உங்கள் அன்பு
முகமும் அரவணைப்பும் உங்கள் நினைவலைகளும்
எங்கள் நெஞ்சை விட்டு அகலவில்லை அப்பா!
தூணாக காலமெல்லாம்
காத்திடுவாய் என இருந்தோம்
காலன் அழைத்தவுடன்
கறைந்ததேனோ காற்றோடு?
வானம் விரிந்திங்கு
வண்ண மழை தூவினாலும்
காணும் உறவெல்லாம்
கைகொடுத்து உதவினாலும்
அப்பா உங்கள் உறவு
இப்போதில்லை என்ற உணர்வு
அனலாய் எறிக்குதப்பா
அகிலமே வெறுக்குதப்பா!
நீங்கள் பூவுலகை விட்டு மறைந்த போதும்
உங்களது ஆத்ம வழிகாட்டலிலும்
உங்களது நினைவுகளுடனும்
எமது வாழ்க்கை பயணம் தொடரும் அப்பா...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
You’re not alone in your sadness, as warm thoughts and deepest sympathy are with you