திதி: 04-04-2024
அமரர் நமசிவாயம் இராமதாஸ்
மலர்வு:15 Jun, 1943 - உதிர்வு: 21 Jan, 2023
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், சித்திரமேழியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நமசிவாயம் இராமதாஸ் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்தாலும ஆறிடுமோ
உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணிபோல் எம்மை காத்த
அன்புத் தெய்வமே ஆறிடுமோ
எங்கள் துயரம் மனம் நிறைந்த அப்பாவே
ஏன் பிரிந்தாய் எம்மை விட்டு
பிரிவு என்றால் என்னவென்று தெரியாது
இன்று உங்களை பிரிந்து பிரிவு என்றால் அப்பா
என்று உணர்கின்றோம்...
உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!
ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள் நினைவுகளும், நிகழ்வுகளும்
உங்கள் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்....!!!
அமரர் பத்மராணி இராமதாஸ்
மலர்வு:10 Oct, 1969 - உதிர்வு: 17 Mar, 2023
யாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை வதிவிடமாகவும் கொண்டிருந்த பத்மராணி இராமதாஸ் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
"கண்ணின் ஒளியாய் வாழ்ந்த
எம் இதய தெய்வமே!
கண்ணின் மணியாய்
காலமெல்லாம் சிரித்துப் பேசிய
பொற்தாமரையே,
உன் பிரிவால் ஒவ்வொரு
கணமும் துடியாய் துடிக்கும்
எம் இதயங்களில்
உன் நினைவுகள்
எந்நாளும் வளர்பிறையே,
உன் ஆத்மா சாந்திக்காக
இறைவனிடம் வேண்டுகிறோம்."