1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நமசிவாயம் ஜெகதீஸ்வரன்
(ஈசன்)
வயது 57
Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சங்கானை அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும், தற்போது பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த நமசிவாயம் ஜெகதீஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 24-07-2023
ஆண்டொன்று ஓடி மறைந்தாலும் ஆறமுடியவில்லை எம்மால்!..!
இன்றும் உன் பிரிவால் எம் இதயம் கலங்குகின்றது!
எம் குடும்ப குல விளக்கு அணைந்ததை
எண்ணி மெழுகாய் உருகுகின்றோம்...!
அளவில்லா அன்பையும் அளக்க முடியாத பாசத்தையும்
அளவில்லாமல் கொடுத்து விட்டு
அரை வயதில் எங்கு தான் சென்றாயோ?
உன் புன்சிரிப்பைக் கண்டு...!
இனிமையான குரலைக் கேட்டு...!
ஓராண்டு காலம் கலைந்து விட்டதே!
காற்றுப் பெருவெளியில் உனைக் காணும்
நாளுக்காய் காத்திருக்கும் நாம்
கடவுளை வேண்டுகின்றோம் ஆத்ம சாந்திக்காய்!
தகவல்:
குடும்பத்தினர்
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன், உன்னுடனான பழைய நினைவுகள் இன்றும் என கண் முன்னே வந்து போகின்றன ஈசன்,