
யாழ். கரவெட்டி வடக்கு ஞானியார் வளவு இரும்புமதவடியைப் பிறப்பிடமாகவும், தற்பொழுது புலோலியை வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் பாலசிங்கம் அவர்கள் 08-02-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம், சின்னம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற சின்னையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பாறுவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சீராளன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
சங்கீதா அவர்களின் அன்பு மாமனாரும்,
துஷாந் அவர்களின் செல்ல அப்பப்பாவும்,
இராஜேந்திரா(இளைப்பாறிய தபால் அதிபர்- கனடா), காலஞ்சென்ற நடராஜா(நில அளவையாளர்), தையல்நாயகி(இலங்கை), செல்வசோதி(யோகா மாஸ்டர்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆனவிழுந்தான் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Words are not enough to express how sorry we are for Bala Annan’s loss. We are very saddened to hear the loss of your beloved husband & father. I knew Bala Annan from infancy. He is very kind...