மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பிரித்தானியா லண்டன், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லதம்பி பத்மநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கருணையே உருவமான கலங்கரை விளக்கம் போன்று
பெருமைசேர் உங்கள் வாழ்வில் பேறுகள் பலவும் கண்ட
அமைதியே உருவமான அகிலம் போற்றும்
மருத்துவ பெருந்தகையாக சேவைகள் பற்பல ஆற்றி
அன்புசால் மனைவியாம் தயாவதி அம்மையுடன்
நல்வாழ்வு வாழ்ந்து நற்குண மக்களை பெற்று நல்வழி நடத்தி
அவரவர் இல்லறவாழ்விற்கு ஏற்ற பொறுப்புமிகு மருமக்களை அமைத்து
குலம் காக்கும் அகில பொக்கிஷங்களாம்
பேரக் குழந்தைகளையும் அரவணைத்து பாராட்டி
சீருடனும் சிறப்புடனும் பேருடனும் புகழுடனும்
பாசத்தின் உறைவிடமாக நிறைவுடன் வாழ்ந்து
இறைபதம் சேர்ந்து ஆண்டொன்று சென்றலும்
உங்கள் நினைவு எம்மை விட்டு
நீங்காது எம் நெஞ்சில்
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்