மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பிரித்தானியா லண்டன், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி பத்மநாதன் அவர்கள் 06-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தயாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
கிரிதரன்(பிரித்தானியா), கீதாஞ்சனா(கனடா), சிறீஸ்காந்தரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr. சாந்தினி, Dr. கிறிஷாந்தா, Dr. கல்பனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கரட்ணம், இராஜநாயகம், நேசமணி, கனகமணி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காயத்ரி, கிரிஷான், மயூரன், திரிஷ்னா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 18-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ந.ப 12:00 மணியளவில் கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Live : Jul 18, 2021 09:00 AM Asia/Colombo
Meeting ID: 627 877 9619
Passcode: 1234
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details