யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hamm ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி இலகுப்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரிகைகள் 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று Hollend Beach இல் மதியம் 01.00க்கு அந்தியெட்டிக் கிரிகைகள் நிறைவடைந்தது. பின்னர், 22.02.2025 சனிக்கிழமை அன்று 11.30 மணியளவில் Josefsheim (Arbeitskreis fur jugendhilfe e.v Ueding Joffrin str.3 59073 HammGermany) எனும் முகவரியில் கல்வெட்டுப் பதிகம் வாசிக்கப்பட இருப்பதால் அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து, அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.
??அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி, அஞ்சலியை தெரிவிப்பதோடு , அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவிக்கிறோம்.??