யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hamm ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லதம்பி இலகுப்பிள்ளை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
என் உயிரினும் மேலாக நான் மதித்து
நேசித்து இனிமையாக வாழ்ந்து கொண்டிருந்த
என் அன்புக்கணவன்,
என்னையும் மற்றும் தன் அன்புக்குரிய
அனைவரையும் விட்டு நிரந்தரமாக பிரிந்து
ஆண்டு ஒன்றாகிறது.
என் வாழ்வில் என் ஆசானாய்
என் குருவாய் என் தேவைகள்
யாவற்றையும் நிறைவு செய்பவனாய்
சிறந்த பக்திமானாய் வாழ்ந்து
என்னையும் பிள்ளைகள்மற்றும் உறவினர்
யாவரையும் கண்ணீர் சொரிய வைத்துப்பரம்
பொருளிடம் சென்றீர்கள்.
நான் உங்கள் உயிரின் பாதி உங்கள்
நினைவே நெஞ்சில் நிறைந்திருக்கிறது,
பிரிவின் துயரை நீக்கத்தெண்டிக்கிறேன்,
இயலவில்லை,நினைவுள்ள நேரமெல்லாம்
நீங்களே நிறைந்திருக்கிறீர்கள்.
ஓராண்டு சென்றாலும் உள்ளத்தில்
ஒளி வீசிக்கொண்டிருக்கிறீர்கள்.
உங்கள் இனைபிரியா இனிய மனைவி,
பிள்ளைகள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!!
??அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி, அஞ்சலியை தெரிவிப்பதோடு , அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவிக்கிறோம்.??