2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். காரைநகர் மருதபுரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெளுக்குளத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த நல்லதம்பி இராசையா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆசையாய் எம்மைப் பெற்று வளர்த்து
சிறப்பாய் அறிவும் பண்பும் புகட்டி
வாழ வைத்த எங்கள் அப்பாவே!
அன்புக்கும் பாசத்திற்கும் உறைவிடமாய்
இமைப் பொழுதில் மீளாத்துயில் கொண்ட
எங்கள் அன்புத் தெய்வமே!
தெய்வத்துள் நீங்கள் நிறைந்து விட்டாலும்
வையத்துள் வாழும் நாங்கள் நித்தமும்
நினைத்தே வாழ்வோம் அப்பா!
தெய்வம் போல் துணையாய் நின்று
நாளெல்லாம் எங்களைக் காப்பீர்கள் அப்பா!
எங்கள் தெய்வத்தின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்
நிமலன் திருவடியில் நீங்கள் சேர்ந்து வாழ வேண்டுகின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்