யாழ். காரைநகர் மருதபுரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெளுக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி இராசையா அவர்கள் 22-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் கதிராசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்லமுத்து அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கனகபாலன், சண்முகபாலன்(பாலன்- பிரித்தானியா Leicester), தேசிங்கராஜா(ரவி- கனடா), நடேஸ்வரன்(ரஞ்சன்- கனடா), யோகரஞ்சினி(ரஞ்சி- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்லமுத்து, இராசமணி, கமலாதேவி(மாதகல் யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தேவராணி(பிரித்தானியா), தர்ஷனி(கனடா), சியாமளா(கவிதா- கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிறேமிளா, பிரவின். பிரீத்தா, சரண், மித்ரா, டில்ஷான், கிருஷான், சுஜித்தன், பவிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று வவுனியா நெளுக்குளத்தில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெளுக்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.