”எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு"
என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க மரணச்செய்தி கேட்டு ஓடோடி வந்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாகவும், நேரிலும், தொலைபேசி வழியாகவும் இரங்கல் தெரிவித்தவர்களுக்கும், தந்தையின் மரணச்செய்தியை இணையத்தளம், முகப்புத்தகம் ஆகியவற்றில் வெளியிட்டவர்களுக்கும், அன்னாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கும் மேலும் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய நிகழ்வுகளில் பங்கேற்று உதவியவர்களுக்கும் எங்கள் உள்ளம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அப்பப்பாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.