1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 07 MAY 1956
விண்ணில் 22 MAY 2021
அமரர் நல்லையா மகேஸ்வரன் (துரைமணி)
வயது 65
அமரர் நல்லையா மகேஸ்வரன் 1956 - 2021 சுதுமலை, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுதுமலை ஈஞ்சடி வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Greven ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லையா மகேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:08/06/2022

முதலாம் ஆண்டு நினைவு நாள் வந்ததோ?
 ஒவ்வொரு நிமிடமும்
உம் நினைவுதான் அப்பா!
 ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - அப்பா
 என அழைப்பதற்கு
நீங்கள் இல்லையே அப்பா!

நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மிடம்
 ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
 சோகத்தை பகிர ஒரு நல்ல
 துணையாக இறைவன் நமக்களித்த
 வரமாக நீங்கள் இருந்தீர்கள்!

புன்னகை புரியும் உம் முகம் தெரிகிறது
 தினமும் ஆனாலும் அது உண்மை இல்லை
 என்று நினைத்தவுடன்
எம் மனம் கலங்குகிறது!

உதிர்ந்து நீங்கள் போனாலும்
உருக்கும் உம் நினைவுகள் - எம்
 உள்ளத்தில் என்றென்றும்
 உறைந்திருக்கும் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

ஆழ்ந்த கவலையில் வாடும் ஆருயிர் அம்மா திரவியம், பாசமிகு மனைவி உதயகுமாரி, அன்புப் புதல்வன் உதயன், அன்பு மகள் மீரா, மருமகள் சர்மிளா, மருமகன் குணசீலன், பேரப்பிள்ளைகள் உதிஷா, லவன்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 22 May, 2021