
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாற்றை நிரந்தர வசிப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லையா செல்வநாயகி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு நினைவலைகள்
அம்மா நீங்கள் எம்மை விட்டுப்பிரிந்து
ஆண்டொன்று உருண்டோடி விட்டது
அம்மாவின் அன்புக்கு ஈடாக இவ்வுலகில் ஏதுமில்லை
உங்களை போல அரவணைக்க யாருமில்லையே
நீங்கள் ஈன்றெடுத்த பிள்ளைகள் நாங்கள்
வெவ்வேறு திசைகளில் நிர்க்கதியாகிவிட்டோம்!
அன்பு உள்ளத்திற்கு அதிபதி எங்கள் அம்மா
அன்போடு பழகி நேசத்தோடு அனைவரையும்
அரவணைத்து அன்பை கற்றுக்கொடுத்தவர்
அயலவரையும் உறவுகளையும் உள்ளத்தால் இணைத்து
மனதால் மகிழ்ந்தாய் எங்கள் அம்மாவே
பூமியை விட்டு விடை பெற்றாளும்
எங்கள் மனதை விட்டு அகலவே மாட்டீர்கள்
உம்மை நினைத்து கண்ணீர் விட்டு கதறுகின்றோம்
எம்மை ஆற்றுவாரில்லை
பூத்து உன் கொடிகள் நான்கும்
உன் பிரிவால் தவிக்குதம்மா
மறுபடியும் இவ்வுலகில் உங்கள் முகம் காண்போமா
என் தெய்வத்தை ஏன் எம்மிடமிருந்து பறித்தாயோ
எம் அன்பைத்தான் முறித்தாயோ
கோபுரம் சாய்ந்து கொடும்துன்பம்
நிகழ்ந்த இந்த ஒரு வருடநாளில்
வாழும் காலத்தில் உங்களை போல்
இரக்கம், கருணை, பாசம், அன்பு, ஈகை, விரும்தோம்பல்
தெய்வபக்தியோடு நீங்கள் காட்டிய மாதிரியைப்
பின்பற்றி
நடப்போம் அம்மா!
நீங்கள் மறைந்து விட்டாலும்
உங்கள்
நினைவுகள் எங்கள்
இதயத்தில் இருந்து
ஒருபோதும் அழியாது
உங்கள் ஆன்மா நிம்மதியாக இறைவன்
திருவடி நிழலில் சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்!!!
தொடர்புகளுக்கு
- Contact Request Details