
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாற்றை நிரந்தர வசிப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா செல்வநாயகி அவர்கள் 11-11-2020 புதன்கிழமை இன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா லட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நல்லையா அவர்களின் அன்புத் துணைவியும்,
நந்தினி(சுவிஸ்), நந்தகிருஸ்னன்(பிரான்ஸ்), காந்தகுமார்(சுவிஸ்), கிருஸ்னகுமார்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுந்தரலிங்கம்(சுவிஸ்), கவிதா(பிரான்ஸ்), அஞ்சலா(சுவிஸ்), சுலக்சனா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுஜந்தன், சுஜேதன், சுலட்சிகா(சுவிஸ்), நிதுர்சிகா, நிதுர்சிகன், கிசோத்(பிரான்ஸ்), டன்சிகா, வினுசிகா(சுவிஸ்), தனுசிகன், திலக்சிகன், கிருசிகன், அஸ்வின்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகை 12-11-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் இல. 296/1 சிவன்கோவில் வீதி உக்குளாங்குளம் வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.