யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், தற்போது லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி இராஜரட்ணம் அவர்கள் 14-11-2020 சனிக்கிழமை அன்று லண்டனின் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்(அப்பையா), நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு பார்வதி தம்பதிகளின் மூத்தமருமகளும்,
காலஞ்சென்ற இராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
மோகனதாஸ்(ராசன்- கனடா), கஜேந்திரதாஸ்(கஜேன்- லண்டன்), சுரஞ்சனா(லண்டன்), காலஞ்சென்ற முருகதாஸ்(முருகா- பிரான்ஸ்), சந்திரதாஸ்(சந்திரா- பிரான்ஸ்), சூரியதாஸ்(சூரி- ஜேர்மனி), குமரதாஸ்(குமரன்- லண்டன்) ஆகியோரின் பாசமான தாயாரும்,
உதயகுமாரி(கனடா), தயாபரன்(லண்டன்), குமுதினி(பிரான்ஸ்), ஜெயந்தினி(பிரான்ஸ்), அனுரா(ஜேர்மனி), சர்மிளா(லண்டன்) ஆகியோரின் அன்பான மாமியும்,
மச்சாள்மார், மச்சான்மார்களின் அன்பு மைத்துனியும்,
பெறாமக்களின் பாசமிகு பெரிய, சிறிய தாயாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
வினிதா, பானுகா, திவ்யா, சுகந்தன், துசாந், ஜானுஜா, ஆரோன், மகீசன், மகீஷா, அபிஷா, அக் ஷன், அஷ்வின், அஷ்விகா, உதயசங்கர், பார்த்திபன், ஜனனி, சுஜீவன் ஆகியோரின் பாசமுள்ள பேத்தியும்,
அர்வின், அனிஷா, ஆரிஷ், சாய்ஸ்வின், சேயோன் ஆகியோரின் பாசமுள்ள பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 18-11-2020 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணிமுதல் பி.ப 06:30 மணிவரை லண்டனில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 19-11-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் Hither Green Crematorium, Verdant Lane, London SE6 1TP, United Kingdom எனும் முகவரியில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பு: நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அஞ்சலி நிகழ்வில் ஒரே நேரத்தில் 2 நபர்கள் மட்டுமே அன்னாரின் பூதவுடலை பார்வையிட முடியும். மேலும் தகனக்கிரியை நிகழ்வுகள் அன்னாரின் குடும்பத்துடன் மட்டுமே நடைபெறும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தாயாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் குமரன் அண்ணா குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்