யாழ். அளவெட்டியை பிறப்பிடமாகவும், ஜேர்மனி Lampertheimஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி கார்த்திகேசு அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நாட்கள் 31 ஆகியும்
எங்கள் இதயங்களில்
என்றும்
நீங்காமல் குடியிருக்கும் அன்னையே!
நீங்கள் எங்களுக்கு செய்த
நன்மைகள்
எண்ணி முடியாதவை
வார்த்தைகளால்
வர்ணிக்க முடியாதவை
உங்கள் நினைவுகள்
எத்தனை
நாட்கள் சென்றாலும்
எம் இதயத்தில்
இருந்து அகலாது
இனிய தாயாக
இல்லறத்தில்
வாழ்ந்தீர்கள் அம்மா!
ஆயிரம் நிலவுகள் வாழ்வில்
வந்து
மறைந்தாலும் ஒற்றைச் சூரியனாய்
பிரகாசித்தீர்கள்
அம்மா!
நாட்கள் 31 சென்றாலும்
ஆறவில்லை மனது
நாட்கள் பல
சென்றாலும்
ஆறாது ஆறாது நினைவுகள்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Rest in peace From: Harris, Vaxsi ,renesh and Malini ravi