Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 SEP 1942
இறப்பு 13 APR 2019
அமரர் நாகேந்திரம் செல்லம்மா 1942 - 2019 வாதரவத்தை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டை 3ம் யூனிற்றை வதிவிடமாகவும், வவுனியா மகாறம்பைக்குளத்தை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நாகேந்திரம் செல்லம்மா அவர்கள் 13-04-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி, லட்சுமி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அரியகுட்டி, நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நவரட்ணம், கணேசமணி, சிவராசா, காலஞ்சென்ற சண்முகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தர்மராஜா(சுவிஸ்), சாந்தகுமாரி(சுவிஸ்), உதயகுமாரி(இலங்கை), காலஞ்சென்ற சுபாஸ் சந்திரபோஸ், குணசீலா(கனடா), வசந்தசேனன்(சுவிஸ்), இளையராஜா(சுவிஸ்), ராஜதர்ஷினி(ரஞ்சினி- சுவிஸ்), இராஜருஸ்யந்தினி(மாலினி- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பொலின், விஜயராஜன், சந்திரன், பகீரதன், அபிராமி, மோகனாங்கி, விக்கி, உதயணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பியோனா, டாவினா, சுவிதன், ஜெனிதன் வியுக்சன், சுஜிதன், சுஜிதா, கரன், தரன், அஸ்விகா, றித்வின், ஹவினா, வினுசியா, அஷ்வின், அஷ்விஜன், நிலவன், நிதிலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

றியான்சிகா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 17-04-2019 புதன்கிழமை அன்று  பி.ப 01:00 மணியளவில் பூந்தோட்டம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தர்மராஜா - சகோதரன்
விஜயராஜன் - சகோதரன்
சந்திரன் - சகோதரன்
குணசீலா - சகோதரன்
வசந்தசேனன் - சகோதரன்
இளையராஜா - சகோதரன்
விக்கி - சகோதரன்
உதயணன் - சகோதரன்