யாழ். நல்லூர் கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், தற்போது தென் ஆப்பிரிக்கா Durban ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகேந்திரகுருக்கள் வைத்தீஸ்வர ஐயர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் மண்ணுலகு விட்டு விண்ணுலகு விரைந்து
ஆண்டு ஒன்றென்ன ஆயிரமே ஆனாலும்
ஆறுமா எம்துயரம் மாறுமா எம் கவலை!
கொடையாகத்தந்த அப்பாவே
எமது வாழ்க்கையின் வெற்றிக்கு உதவிடுவீர்கள்
தட்டிக் கொடுப்பீர்கள் அன்புக்காட்டி
ஆதரவாய் இருப்பீர்கள் என்றிருந்தோம்
ஆனால் அகிலத்தில் இல்லை இனி எமக்கு
அப்பாவின் அரவணைப்பு!
காலங்கள் போகலாம் கனவுகளும் தொடரலாம்
காத்திருப்புகள் இனி நிரந்தரமில்லை
அதில் நிம்மதியும் இல்லை!
நிஜமாக வாழ்ந்த வாழ்க்கை இன்று
காணல் நீராய் போனதென்ன
மண்ணுலகை விட்டுச் சென்றாலும்
விண்ணுலகில் பேரின்ப பெரு வாழ்வு வாழ!
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
பிராத்தி்க்கும் உங்கள் அன்பு பிள்ளைகள்
ஓம் சாந்தி....... ஓம் சாந்தி .....ஓம் சாந்தி
My heartfelt condolences to Somiya and her family. His soul rests in peace. Shamalai