
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகசோதி நவீனராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டாய் உருண்டோடி மறைந்தாலும்,
அகலாது உங்கள் முகம் எம் நெஞ்சிலிருந்து...
அன்பும் பாசமும் கலந்த உங்கள் சிரிப்பு,
இன்றும் எம் நினைவில் நிழலாய் நிற்கின்றது.
எங்கள் வாழ்வை பசுமையாய் மலரச் செய்த
அன்புத் தாயே, எங்களை விட்டுப் பிரிந்ததேன்?
உங்கள் அரவணைப்பு இன்றும் நிழலாய் தோன்றி,
உள்ளம் உருகும் ஒவ்வொரு நொடியிலும் நினைவாய் நீங்காமல் நிற்கிறீர்கள்.
எத்தனை ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்,
எங்கள் நெஞ்சம் துடிக்கும் வரை உங்கள் பெயர் ஒலிக்கும்,
உங்கள் அன்பு எம்மை வழிநடத்தும்.
அம்மா, உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பணிவுடன் பிரார்த்திக்கின்றோம்.
உங்கள் நினைவு எம் வாழ்வின் ஒளி,
எங்கள் இதயத்தின் நிலைமாறாத மலர்
accept my condolences to Thive Vino and neru