யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகரத்தினம் சிதம்பரநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 01-02-2024
அம்மா!ஆண்டொன்று ஆனதம்மா இன்று!
ஈன்றெம்மைப் பெற்றவளே!
உனை இழந்து! உமைப் பிரிந்தோம்!
பல நாள் ஊணுறக்கம் மறந்தோம்!
அழுதழுது தேடுதம்மா
எம் விழிகள் உங்களைக் காண்பதற்கு
ஒருமுறை வருவீர்களோ!
நினைத்து பார்க்கு முன்னே
நினைக்காமல் போனதென்ன
நிஜம்தானா என்று நினைக்கின்றோம் தினமும்
திக்கற்று தவிக்கின்றோம் திரும்பி வரமாட்டிரே
எங்கள் இதயதுடிப்பில் அன்பு கொண்ட உம் முகம்
அருகினில் இருப்பது போல் உணர்கின்றோம்
தாயாய் உதித்த எங்கள் பாசவிளக்கு ....
அள்ளி எடுத்து அரவணைத்த அன்புத் தாய்
பார்விட்டு அகன்று ஓராண்டு ஓடியது
கார்மேக கூட்டமாய் கலையாது உங்கள் நினைவுகள்
காலம் கடந்தும் வாழும் உங்கள் ஞாபகங்களுடன்....
அன்பு குடும்பத்தினர்
உங்கள் குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திக்கிறோம். 🙏💐