

யாழ். உடுப்பிட்டி 15ம் கட்டையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நாகரட்ணம் செல்வச்சந்திரன் அவர்கள் 09-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரட்ணம், சீதவன்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மனவல் செபமாலை, மற்றும் திரேஸ்மலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
எல்சி அவர்களின் அன்புக் கணவரும்,
சாருகா அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், சந்தானலெட்சுமி, ஜெயச்சந்திரன், சீதாலட்சுமி, ஜெயச்சந்திரன், இராமச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ஜெயகெளரி, பாக்கியம், தவரத்தினம், திருநாவுக்கரசு, செல்வா மற்றும் யோகேஸ்வரி, ஜெசிமா, ஜெயா, விஜிதா, வனிதா, செல்வன் ஆகியோரின் மைத்துனரும்,
ரஞ்சினி, வினோ, சுஜி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
நந்தகுமாரி(ரஜனி), காந்தன், உதயன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்