யாழ். கொக்குவில் தலையாழியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ஆம் வட்டாரம் பெருங்காடு கிராஞ்சியம் பதியை வாழ்விடமாகவும், இந்தியா திருச்சி அம்மையப்பன் நகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகரெத்தினம் கந்தசாமி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 04-08-2023
அம்மா ஆண்டுகள் பத்து ஆகியது
ஆனாலும் அன்றாடம் நித்தம் நித்தம்
உங்கள் நினைவுகள் எங்கள் மனங்களில்
எமது இல்லங்களில்....
சுட்டுவிரல் தந்து முதல் நடை பயில்கையில்
உங்கள் உடல் இயக்கம்
அனைத்தும் ஓங்காரமாய் தந்த தாயே....
விழுதுகளாய் நாங்களிங்கே
ஆணி
வேரான அம்மா நீங்கள் எங்கே??
அரும்பாக இருந்த எங்களை
பூ ஆக்கி
காயாக இருந்த
எம் உள்ளங்களை கனியாக்கியவளே!!!
உன்முகம் பார்க்கையில் ஆயிரம்
சூரிய
உதயம் தெரியும் அம்மா
உன்னிரு விழிகள் பார்க்கையில்
அதில் அற்புத தீபங்கள் தெரியும் அம்மா
உயிர்தந்து உடல்தந்தவளை
பேச்சின்றி மூச்சின்றி மயானம் சுமந்தோமே!!
தாய்ப்பால் தந்து காத்தவளை பாவி
இயமனிடம் காக்க முடியவில்லையே!!
பன்னீர் குடமுடைத்து இவ்வுலகை
காட்டியவளுக்கு கொள்ளிக்குடம்
உடைத்து கொடும் தீ இட்டோமே!!
உங்களுடன் இருக்கையில்
குறுஞ்சியிலே நாங்கள் அம்மா!!!
நீங்களின்றி தாயே இப்போ
நாங்கள் பாலைவனத்தினிலே அம்மா!!!!
அன்பும் அறனும் எவ்வழியோ அவ்வழி
நட என அறிவு தந்த தாயே
இப்போ
அதன் படி நாங்கள் அம்மா....
கண்டிப்போடு கருணை காட்டி
எமை
வளமாய் வளர்த்த தாயே
எப்போ காண்போம் இனி?
எங்களுக்காக ஊண், உறக்கம் மறந்து
எம் நல் வாழ்வுக்காக உனை மறந்த
தாயே
பத்தாண்டுகள் இல்லை பல
நூற்றாண்டுகள்
நாம் மறவோம் அம்மா.
உங்கள் ஆத்ம சாந்திக்காக எல்லாம் வல்ல
கிராஞ்சியம்பதி முருகனை வேண்டி தாழ் பணிகின்றோம்....