யாழ். வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் கோவிலடி, காேண்டாவில், இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகராசா சுவீகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆற்ற முடியாத வலியை நொந்து
அழுவதால் தீருமோ கண்ணில்
ஊற்றெடுக்கும் அருவி என்றும்
உன் நினைவினை மறக்குமோ போற்றிடும்
தாயை இழந்தொரு மாதம் வருமுன் எம்
தம்பி உனை இழந்தோமே எங்கள்
அம்மா தன் கடமை செய்தபின் உன்னைத்
தன்னிடம் வர அழைத்தாவோ
ஆண்டு ஒன்று ஆனாலும் ஆற்றமுடியாது
அன்னையை இழந்து அடுத்த மாதமே உன்னை இழந்தது
தனிமையில் தவிக்க முடியாது தாய் அழைத்தாவோ
தாயை பிரிந்து வாழமுடியாது நீ தேடிச் சென்றாயோ
அன்புத் தம்பியே! அன்புத் தம்பியே!
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
உங்கள் இருவரின் ஆத்மா சாந்தியடைய
முடிப்பிள்ளையாரை வேண்டுகிறோம்.
I am so sorry to hear of this unexpected loss. Please accept my heartfelt condolences.