யாழ். வேலணை மேற்கு சிற்பனை முருகன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வேலணை 7ம் வட்டாரம், நீர்கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகபூரணி சிவலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னையவள் எமைப்பிரிந்து
நாட்கள் முப்பத்தொன்று
ஏற்க முடியவில்லை அம்மா
உமது இப்பிரிவுதனை
அவனியில் நீ இருந்தவரை
எமக்கு அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
குடும்பத்தின் ஆணிவேராய்
அனைத்தையும் தனியாளாய் தாங்கி நின்றாய்
பார்போற்ற நாம் வாழ வேண்டுமென
பல இன்னல்களை கடந்து வந்தாய்
இன்னும் பல வருடம் நீங்கள்
உடன் இருக்க ஆசை கொண்டோம் பு
விதனில் உமது பணி முடிந்ததென்று
புறப்பட்டாயோ விண்ணுலகம் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய ப
ணிகின்றோம் இறைவனின் பாதங்களை
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.