யாழ். ஆனைக்கோட்டை லோட்டஸ் வீதியைப் பிறப்பிடமாகவும், இணுவில் தெற்கு பாலாவோடையயை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகமுத்து இராசரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் ஒளிவிளக்காய்
மிளிர்ந்த எம் தலைவனே!
அறிவூட்டி சீராட்டி வளர்த்த தந்தையே!
புத்திமதிகள் பல சொல்லி
நாம் புரியும்படி பல கதைகள்
சொல்லி சஞ்சலம் இன்றி இல்வாழ்வு
வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லி
எம்மை செம்மையாக அனைவரையும்
அன்புடன் அரவணைப்பவர்!
மண்ணில் எங்கள் வாழ்வதனை நாளும்
கண்ணில் மணிபோல் காத்து நின்றீர்- இன்று
விண்ணில் இருந்து வழி நடத்தும்
மண்ணில் அடங்கா உன் அன்பை இழந்தோம்
வருடங்கள் ஒன்றானாலும் ஆறாது
உங்கள் பிரிவின் துயரம்
தீராது எங்கள் சோகம்
உங்கள் இழப்பை எண்ணியெண்ணி
இன்றும் எங்கள் விழிகளில்
வழிகின்றதே கண்ணீர்த்துளிகள்...
என்றும் உங்கள் பிரிவால் துயறுரும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள்