யாழ். எழுதுமட்டுவாளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா குலசேகரம்பிள்ளை அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எழுது மட்டுவாள் மண் விளைந்த தாயே
எங்கள் குல விருட்சத்தின் ஆணிவேரே
பதிக்கு துணையாய் பாசம் விதைத்தீர்
பகிர்ந்திட்ட பிள்ளைகளின் உயர்வுக்கு ஒளி தந்தீர்
உற்றவரும் சுற்றவரும் போற்றிட வாழ்ந்து
மேதினியில் எம் குடும்ப புகழ் ஒங்கிட வைத்தீர்
உம் கருவறை தந்த வெப்பம்
எம் காலம் வரை உணர்வோம்......
உம் மூச்சில் நாம் உயிர் வாழ்ந்த
நாட்களை நினைவுகளில் சுமந்து வாழ்வோம்
அன்னை ஊட்டிய அன்பு கலந்த அமிர்தம்
எம் குருதி யோட்டத்தில் உணர்வாய் உளர்ந்தோட....
45ம் நாளில் நாம் விழிசொரிந்து நனைகின்றோம்
விதியின் வழியே வலி தென்பதால்
அமைதி கொண்டு உம் ஆத்மசாந்திக்கு பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாப செய்திகள் அனுப்பியவர்களுக்கும், வைத்தியசாலையில் இவரைபராமரித்த மருத்துவர்கள் தாதியர்கள் ஊழியர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு மலர்வளையங்கள் மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகள், பதாகைகள் வழங்கியவர்களுக்கும் மற்றும் இன்றுவரை சகல உதவிகளையும் செய்துவரும் அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தினர் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம்.