11ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர்கள் செல்லையா இலகுப்பிள்ளை நாகம்மா இலகுப்பிள்ளை
இளைப்பாறிய அதிபர் - புங்குடுதீவு சேர் துரைச்சாமி வித்தியாசாலை, திருநாவுக்கரசு வித்தியாசாலை
இறப்பு
- 30 JUN 2012
அமரர்கள் செல்லையா இலகுப்பிள்ளை நாகம்மா இலகுப்பிள்ளை
2012
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகம்மா இலகுப்பிள்ளை அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பாசத்துடனும் பாதுகாத்த
எங்கள் அன்பு அம்மாவே
எங்கள் அனைவரையும் விட்டுப்
பிரிந்தது தான் ஏனோ...??
மடியினிலே தூங்கிவிட
மண்ணிலே நீருமில்லை....
தேடியே பார்க்கின்றோம்
தேற்ற யாருமில்லை..
ஓடியே போனது பதினொரு ஆண்டுகள்
தட்டிக் கொடுத்துவிட தந்தையுமில்லை
கட்டி அணைத்துவிட தாயுமில்லை கதறுகிறோம்.
கொட்டிக் கொடுத்துவிட
கோடி இருந்தென்ன
ஊட்டி வளர்த்துவிட்ட
தாய்க்கு ஈடாகுமா???
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
எமையெல்லாம் வாழவைத்து
வானுறையும் எமது தெய்வத்தின்
இனிய நினைவுகள்- எங்கள்
உதிரத்தில் சுமந்த வண்ணம்
இம் மலரை உங்கள் பாதங்களில்
சமர்ப்பிக்கிறோம்.
தகவல்:
குடும்பத்தினர்