
யாழ். நெடுந்தீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி சிதம்பரம்மா அவர்கள் 11-04-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், காமாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகுட்டி, தையலம்மை தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற நாகுட்டி நாகமணி அவர்களின் பாரியாரும்,
புவிநாயகம், நவநாயகம், சபாநாயகம், குலநாயகி, யோகநாயகம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயந்திகுமாரி, லோகேஸ்வரி, காலஞ்சென்ற குமுதினி, கஜேந்திரலிங்கம், மரகதமொழி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கந்தையா, குமாரசாமி, தனுஷ்கோடி, கோபாலபிள்ளை, ஏகாம்பரம், பொன்னம்பலம், பசுபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தில்லாத்தைப்பிள்ளை, சின்னத்தங்கம், அடைக்கலம்மா, கமலா மற்றும் தங்கம்மா ஆகியோரின் மைத்துனியும்,
நிசாந், வைஸ்ணவி, சாரங்கா, மதுசா, பகலவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது வவுனியா இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 19,
2ம் வைரவர் கோவில் ஒழுங்கை,
வைரவ புளியங்குளம்,
வவுனியா.
Live Streaming Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details