ஶ்ரீமான்-அமர்ர்-நாகமணி நடராசா (கணக்காள்ர்) அன்பான மாமாவுக்கு மருமக்களின் ஆறாத நீர்த்துளிகள் காணிக்கை. பிறந்ததோ நெடுந்தீவினிலே நிறைந்ததோ அறிவுமழை சிறக்ததால் கணக்காளராய் கடமை ஏற்று அன்பெல்லாம் ஓருருவாய் அமைந்த தோற்றம் அனைவரையும் இன்முகத்தோடு அணைத்து நின்றீர்களே சகோதரருக்கு பாசத்துணைவராய் பழகியவர்க்கு பண்பின் சிகரமாய் தரணியிலே தலை நிமிர்த்து நின்று ஆயிரம் கனவுகளை எண்ணி இருந்திர்களே மாமா மலை சரிந்தது போல் உங்கள் துயர் நாம் கேட்டு கண்ணீரில் கதிகலங்கு நிற்கின்றோம் நாமிங்கே. கண்மூடி கணப்பொழுதில் தனிமையாக எங்கே சென்றீர்கள் மாமா உங்களைப் போல் பண்பிலே தெய்வமாய் பாரினிலே யார் இனி எம்மை ஆதரிப்பார் உற்றார் உறவினர்கள் ஏங்கித் தவிக்கையிலே எங்கு தான் சடுதியாய் சென்று மறைந்தீர்கள் மாமா நம்பவேமுடியவில்லை வழிமேல் விழிவைத்து வாழும் காலம் யாவும் உங்கள் நினைவோடே வாழ்ந்திடுவோம். எங்கருந்தாலும் இறைவன் திருவடி சேர்ந்திட இதயம் நோக உங்களை வழி அனுப்பிவைக்கின்றோம்.