Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 09 JUL 1957
இறப்பு 20 AUG 2024
திரு நாகலிங்கம் திலகநாதன் (ஜெமினி)
வயது 67
திரு நாகலிங்கம் திலகநாதன் 1957 - 2024 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். வேலணை கிழக்கு 5ம் வட்டாரம் மணியகாரன் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் திலகநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.  

கடந்த 20-08-24 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்த எங்கள் குடும்பத் தலைவர் அமரர் நாகலிங்கம் திலகநாதன் அவர்களின் அந்தியேட்டிக் கிரிகையும், சபிண்டிக் கரண கிரிகையும் 19-09-2024 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் இடம்பெற்று 21-09-2024 சனிக்கிழமை அன்று மதிய போசன விருந்துபசாரமும் நடைபெறும் எனஅறியத் தருகின்றோம். அனைவரும் இவ்விருந்துபசாரத்தில் பங்கேற்று அன்னாரின் ஆத்ம சாந்திக்காய் பிரார்த்திக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நேரம்: 12.30PM - 05.00PM
விருந்துபசாரம் இடம்பெறும் இடம்:
Stiglenstrasse 48 8052 Zürich
Tel. San +41793550642
Tel. Nirusha +41764241002

வீட்டு முகவரி:
Obermattenstrasse 30
8153 Rümlang, Switzerland.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 22 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.