யாழ். வேலணை 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Birmingham ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் செல்வநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
உங்களை நாம் இழந்த துயரை
ஈடுசெய்ய இயலாமல் தவிக்கின்றோம்!
அன்று எங்களது துன்பம் நீக்க
குடும்பத்தின் குல விளக்காய் பாசத்தின்
பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய் எம்முடனே!
எமக்காகவே வாழ்ந்த எம் குலக்கொழுந்தே!
வசந்தகாலம் என்றால் அது உங்களுடன்
வாழ்ந்த காலம் தானே! வாழ்க்கை என்பது
இறைவன் அவன் வகுத்தவரை தானே!
இன்றோடு 31 நாட்கள் கடந்தாலும்
உங்கள் அன்பு முகம், பண்பு,
பரிவு, பாசம் மாறாதே!
நெஞ்சில் உங்கள் நினைவுகளை
சுமந்தே நெடுங்காலம் நாம் இங்கே
நிலைத்து வாழ்வோமே வானில்
விண்மீனாய் இருந்து எம்
வாழ்வை வளப்படுத்துவீரே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.