
யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் இராசு அவர்கள் 04-02-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகர் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவசோதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சுமேந்திரன்(ஜேர்மனி), கெங்காதரன்(பிரான்ஸ்), சிவபதன்(நோர்வே), சபேசன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நவறஞ்சிதமலர், சிவநாகேஸ்வரி, ரஜிதா, சறோஜினி ஆகியோரின் அன்பு மாமனும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, ஐயாத்துரை மற்றும் சிவயோகம், சண்முகராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானம், சிவசம்பு, சிவபாக்கியம், சிவக்கொழுந்து ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிந்துஜா, பிரசன்ஜா, லோசனா, கஜானா, திசானி, அபிசன், தீபிகா, மிதுசன், கேஸ்விகா, யதுஸ், சர்மிலா, அகிலன், ஜனனி, கிசாளினி ஆகியோரின் அன்புப் பேரனும்,
இலியாஸ் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-02-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:30 மணியளவில் துண்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I was saddened to hear that your FATHER passed away. My thoughts are with you and your family.