Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 JAN 1924
இறப்பு 08 AUG 2020
அமரர் நாகலிங்கம் மகாலிங்கம் (மாங்கண்ணன்)
வயது 96
அமரர் நாகலிங்கம் மகாலிங்கம் 1924 - 2020 சரவணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சரவணை கிழக்கு பள்ளம்புலம் லைடன்தீவைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் மகாலிங்கம் அவர்கள் 08-08-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கலைமகள்(சித்திரபூபதி) அவர்களின் அன்புக் கணவரும்,

கண்ணுதல்(கனடா), மயூரன்(கனடா), ஜெயந்தி(ஓய்வுபெற்ற ஆசிரியை- யா/ புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயம்), வசந்தி(பிரான்ஸ்), சுகந்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுகந்தி(கனடா), வாசுகி(கனடா), கலாநிதி சாந்தன்(பேராசிரியர்- பேராதனை பல்கலைக்கழகம்), ஞானசொரூபன்(பிரான்ஸ்), ஜெகதீஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நடராசா(ஆசிரியர்), அன்னலட்சுமி, இராசலட்சுமி, பொன்னுத்துரை, சௌபாக்கியலட்சுமி மற்றும் சாரதாம்பிகை(ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உலகநாயகி, காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, நடராசா, பழனிநாதன், சோதிவேற்பிள்ளை, , சங்கரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,  

அனித்தா, சயன், சாயிஷா, மதுறமி- றெஸ்லின், நிறோஷா, சானுஜா, கஜாணனன், ஹனீசா, வனேசா, இராகுலன், மதுஷா, யதுஷன், நிதுர்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,

சம்யுக்தா அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சரவணை புண்ணம்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு


குடும்பத்தினர் 
Contact: +94777909318

ஜெயந்தி - மகள்  
Contact: +94779135864

கண்ணுதல் - மகன்
Contact: +16472904344

மயூரன் - மகன்
Contact: +14168800777

வசந்தி - மகள்
Contact: +33781306727

சுகந்தி - மகள்
Contact: +44753385215


தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 07 Sep, 2020