Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 04 MAR 1935
இறப்பு 12 FEB 2026
திரு நாகலிங்கம் குணசிங்கம் (குணம்)
வயது 90
திரு நாகலிங்கம் குணசிங்கம் 1935 - 2026 ஏழாலை மத்தி, ஏழாலை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். ஏழாலை மத்தி ஏழாலையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் நியூஸ்ரெட் வயிலை, புரடேசியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் குணசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நாட்கள் 31 ஆனதப்பா
ஆறவில்லை எம் துயரம்
மீண்டெழுந்து வந்திடப்பா
மீழா துயர் துடைத்திடப்பா

துன்பம் இன்றி கஷ்டங்கள் இன்றி
எங்களை காத்தீரே எம் தந்தையே!
எம்மை விட்டு பிரிந்ததேனோ?

மறையாத உங்கள் நினைவு!
மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால்
உங்களுக்கு பிள்ளைகளாக பிறக்கும்
பேறு பெற வேண்டும்- அப்பா!

ஆற்றாது கண்ணீர் அழுது புலம்புகின்றோம்
31 நாட்கள் மறைந்தாலு
ம்

பல நூறாண்டு போனாலும்
உங்கள் சிரித்தமுகம் எங்கள்
நெஞ்சில் நிறைந்திருக்கும்
மறக்க முடியவில்லை மலர் தூவி என்றும்
உங்கள் மலர்ப் பாதம் வணங்குகிறோம்!

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.  

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 14-03-2026 சனிக்கிழமை அன்று Lumbyesvej 8.7000 Fredericia Danmark எனும் முகவரியில் நடைபெறும்.

வாழ்க்கை வரலாறு:
ஆசிரியர் திரு.நாகலிங்கம் குணசிங்கம் அவர்களின் வாழ்க்கை வரலாறு இலங்கைத் திருநாட்டின் மணி எனத் திகழ்வது யாழ்ப்பாணம் ஆகும். அந்த யாழ் நகரில் நீர்வளம், நிலவளம், கல்விவளம், தொழில் வளம், எனப் பலவளங்களைக் கொண்டமைந்த பெரிய கிராமம் ஏழாலை ஆகும். ஏழு ஆலயங்களைத் தன்னகத்தே கொண்டதனால் இக்கிராமம் ஏழாலை எனப் பெயர் பெற்றது. புலவர்களையும் கல்விமான்களையும் கலைஞர்களையும் பெற்றெடுத்து தலைநிமிர்ந்து நிற்கும் புண்ணியபூமி இதுவாகும். மழைநீரால் நிரம்பிய குளங்களும் அக் குளங்களைச் சுற்றி நெல்வயல்களும் இவ்வூருக்குப் பெருமை சேர்ப்பனவாகும். இப்படிப்பட்ட ஏழாலை மத்தியில் அன்பு, அருள், ஈகை, கருணை என்பவற்றில் சிறந்து விளங்கிய பெரியவர்கள் நாகலிங்கம் இராசம்மா தம்பதியர் ஆவார்.இவர்கள் செய்த அருந்தவத்தின் பயனாக 04-03-1935 ஆம் ஆண்டு குணசிங்கம் அவர்கள் சிரேஷ்ட புத்திரனாகப் பிறந்தார். இவர் ஒன்பது சகோதரர்களுக்கு மூத்த அண்ணணாக இருந்து நல்வாழ்வு வாழ்ந்தார். இவர் ஏழாழை மகாவித்தியாலயத்தில் கல்வி பயின்றார். அப்போது கல்வியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற பெருமையையும் பெற்றார். சிறுவயதிலேயே சித்திரம் வரைவதில் ஈடுபாடுடையவராக விளங்கினார். பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் இவர் பலாலி ஆசிரியா பயிற்சிக்கலாசாலையில் பயிற்சி பெற்று மருதானையில் ஆசிரியராகப் பணியாற்றினார். மேலும் வர்த்தகத்தில் நாட்டமுடையவராக இருந்தமையால் ஏழாலையில் வர்த்தகராகவும் பணிபுரிந்தார். குணசிங்கம் அவர்கள் ஏழாலை ஊரங்குணையில் வசித்து வந்த சின்னத்துரை முத்தம்மா தம்பதிகளின் மகளான பரதாம்பிகை என்பவரை மணம்புரிந்தார். இவர்களது இல்லறமான நல்லறத்தின் பயனாக இவர்களுக்குக் குணரஞ்சன், குகதாசன், குலேந்திரன், குணறெயினா, குணசீலன், குமுதினி, குணகௌரி, ஆகிய புத்திரச் செல்வங்களைப் பெற்றார். தனது பிள்ளைகளுக்குத் தகுந்த மருமக்களைக் கண்டு அவர்களுக்குத் திருமணம் செய்துவைத்து அவர்கள் நல்வாழ்வு வாழ்வதைக் கண்டு மகிழ்ந்தார். இதன் மூலம் 21 பேரக்குழந்தைகளைப் பெற்று மகிழ்ந்திருந்தார். அத்துடன் 9 பூட்டப் பிள்ளைகளையும் பெற்றுப் பேரானந்தம் அடைந்தார். 1991ஆம் ஆண்டு தனது மனைவியுடன் டென்மார்க் வந்தார். தனது மூத்த மகளின் ஆதரவுடன் நியுஸ்ரெட், வயிலை, பெரடீசியா, போன்ற நகரங்களில் வாழ்ந்தார். இவரது துணைவியார் காலமாகியபின்பு இவர் தனது மூத்த மகளின் அரவணைப்பில் வாழ்ந்தார். வயது மூப்புக் காரணமாக இந்த வருட ஆரம்பத்தில் பலவிதமான நோய்கள் இவரை வாட்டி வதைத்தன. 12-2-2026 ஆம் ஆண்டு கோளிங் வைத்தியசாலையில் தனது மூத்த மகளின் கரங்களைப் பற்றியபடி இறைவன் திருவடியைச் சென்றடைந்தார். இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ்ந்து அன்பை எமக்கு நல்விதையாகத் தந்துவிட்டு தந்துவிட்டு மறைந்த திரு. நாகலிங்கம் குணசிங்கம் அவர்களது ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திப்போமாக. ஓம் சாந்தி! 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.